நிலச்சரிவு தொடர்பாக கேரளா முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.இதனிடையே ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள்.
இங்கு இருந்த 20 வீடுகளில் 80-க்கு மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. இதுவரை 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் இன்று (07.08.2020) அதிகாலை தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமாய் மாண்புமிகு கேரளா முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…