மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

Tamilnadu Chief Minister Palanisamy is consulting with medical experts at the General Secretariat in Chennai.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களோடு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மாதம் தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.ஆகவே கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றியும், தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார் .

இந்நிலையில் இதனைத்தொடர்ந்து  புதிய வகை கொரோனா மற்றும் தடுப்பு பணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களோடு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.