அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

Chief Minister Palanisamy consults with all District Collectors

கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பான அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மாதம் தமிழகத்தில் ஜனவரி  31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.எனவே தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் வருகின்ற 31-ஆம் தேதி நள்ளிரவு வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றியும், தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.