தலைமைச் செயலகத்தில் மத்திய குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

CM Palanisamy is scheduled to hold consultations with the Central Committee this morning at the General Secretariat

பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்த நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை மத்திய குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 5-ஆம் தேதி மத்திய குழு சென்னை வந்தடைந்தது.தமிழகத்தில் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு.ஆகவே நேற்று முன்தினம் முதல் மத்தியகுழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சென்னை,கடலூர்,வேலூர் ,புதுச்சேரி  உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்தனர்.குழுக்களாக பிரிந்து வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

இந்நிலையில் நிவர் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்த நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை மத்திய குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.இந்த ஆலோசனையில் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி கோரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.