முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை..!

Chief Minister Palanisamy is scheduled to hold consultations tomorrow on controlling the spread of corona disease.

கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

முதலில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அந்த தாக்கம் குறைந்து வருகிறது.இதனைக்கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன.இதற்கு இடையில்,தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

கடந்த சில நாட்களாக உருமாறி உள்ள புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் இந்த வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறதாக செய்திகள் வெளியாகி வருகிறது.இதனால் உலக நாடுகள் மீண்டும் பீதியடைந்துள்ளன.ஆகவே பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.வைரஸ் பரவல் இருப்பதால் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.ஏற்கனவே பிரிட்டன் விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றியும், தமிழக முதலமைச்சர் பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் புதிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.