கரூர் மாவட்டத்திற்கு இன்று முதலமைச்சர் பழனிசாமி வருகை

Today,Tamilnadu Chief Minister Palanisamy is going to Karur district to inspect and provide welfare assistance.

இன்று  கரூர் மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர் பழனிசாமி அங்கு  ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று கரூர் மாவட்டத்திற்கு  முதலமைச்சர்  பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.மேலும் ரூ.627 கோடி மதிப்பிலான 2,089 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.