முதலமைச்சர் பழனிச்சாமியின் பயணம் தமிழகத்திற்கு நலன் சேர்க்கும் வகையில் இருந்தால் நல்லது- திருநாவுக்கரசர்

சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிச்சாமியின் இந்த பயணம் தமிழகத்திற்கு நலன் சேர்க்கும் வகையில் இருந்தால் நன்றாக இருக்கும். இதுவரை ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் போடப்பட்ட முதலீட்டாளர்கள் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே இந்த முறை அதுபோன்று இருக்க கூடாது, பொருளாதார நெருக்கடியை போக்க ரிசர்வ் வங்கியில் உள்ள பணத்தை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது, குண்டு காயத்தின் மேல் பேண்டேச் ஓட்டுவது போன்று, இது பயனளிக்காத ஒன்று என்ற ராகுல்காந்தியின் கருத்து நிதர்சனமான உண்மை ஆகும்.கர்நாடகத்தில் எடியூரப்பா விருப்பத்தின் மாறாக மத்திய பாஜக துணை முதலமைச்சர்களை நியமித்து உள்ளனர். அதுமட்டுமின்றி கர்நாடகா ஆட்சி அமித்ஷா கையில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025