முதல்வர் ஸ்டாலின் திருவாரூருக்கு 2நாள் பயணம்.!

முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று திருவாரூர் செல்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று திருவாரூர் செல்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்கு இரண்டு நாள் பயணமாக இன்று திருவாரூருக்கு செல்கிறார். இதற்காக விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து அவர் சாலை வழியாக திருவாரூர் செல்ல இருக்கிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் தேர்தல் பரப்புரையில் தினம்தினம் அனல்பறக்க நடைபெற்று கொண்டிருக்கிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்க்கொண்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் வரும் பிப்-24 ஆம் தேதி பிரச்சாரம் செய்கிறார். இதனிடையில் பிப்-22இல் நடைபெற இருக்கும் திமுக நிர்வாகியின் இல்லதிருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை ஏற்கிறார்.

இதனையடுத்து திருவாரூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வரின் இந்த பயணத்தை முன்னிட்டு திருவாரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் பலப்படுத்தப்பட்டுள்ளன.