தமிழக மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர்..!

ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும், தமிழக மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரை அழைத்து வர எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து உயர் அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, எம்.பி.,க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு ஓன்று உருவாக்கப்பட்டது.
இக்குழு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு சென்னை வந்தடைந்த மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் சென்று வரவேற்றார்.
நாடு திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிகுழுவை பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். தமிழக மாணவர்களை அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மா. சுப்பிரமணியன் , தா.மோ அன்பரசனும் வரவேற்றனர். உக்ரைனில் சிக்கி தவித்த தமிழகத்தை சார்ந்த 1,860 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.