சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்ச் 1-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு.
மாபெரும் பொதுக்கூட்டம்:
unknown nodeதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்ச் 1-ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை வரும் மார்ச் 1ம் தேதி பிரமாண்டமாக கொண்டாட உள்ளனர். அன்றைய தினம் நடைபெறும் பிரம்மாண்டமான கூட்டத்தில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் பங்கேற்பு:
unknown nodeஅதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் பிரமாண்டமான திமுக பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பார் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தேசிய தலைவர்கள் பங்கேற்பு:
unknown nodeமேலும், இந்த பொதுக்கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகிய தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர் என்றும் கூறியுள்ளார். இந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள் திரளாக வந்திருந்து சிறப்பிக்க வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டு உள்ளார்.