டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் இன்று மாலை தமிழகம் வருகை!

இன்று சென்னை வருகிறார்கள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் இன்று மாலை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளனர். டெல்லியில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக அர்விந்த் கெஜ்ரிவால் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை இன்று சென்னையில் சந்தித்து பேசவுள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால். தனி விமானம் மூலம் இன்று மாலை 4 மணி அளவில் சென்னை வரும் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமை செயலகம் சென்று முதல்வரை சந்திக்கவுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் வரவுள்ளார். மாநிலங்களவையில் திமுகவுக்கு 10 எம்பிக்கள் பலம் உள்ள நிலையில், ஆதரவு கோரி தமிழகம் முதலமைச்சரை சந்திக்கிறார். மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக, எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் டெல்லி முதல்வர், இன்று தமிழக முதல்வரை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.