ஐயோ போச்சே..! இந்த மாதம் ஒரே ‘ஒரு நாள்’ தான் விடுமுறை…!

ஜூன் மாதம் தொடங்கியிருக்கும் உற்சாகத்தில் இருக்கும் மக்களுக்கு அதற்குள் உங்களுக்கு ஒரு கசப்பான செய்தியும் கிடைத்துள்ளது. அதாவது, இந்த மாதத்தில் ஒரே ஒரு நாள்தான் அரசு விடுமுறை. அதுவும் மாதத்தின் கடைசி வாரம் தான். ஜூன் 29 தான் பக்ரீத் பண்டிகை வருகிறது, அதனால் அன்றைய தினம் அரசு விடுமுறை ஆகும்.
ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை நாள்காட்டியின்படி, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை உட்பட வெவ்வேறு விடுமுறைகள் காரணமாக வங்கிகள் 12 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.