BREAKING: தமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் கோரிக்கை .!

தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில்

தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் மருத்துவர்கள் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர்.

இதையெடுத்து இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்த கூட்டம் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.

இந்நிலையில் கூட்டம் முடிந்த பிறகு தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , இன்று காலை பிரதமர் உடனான ஆலோசனையின் போது முதல்வர் பழனிச்சாமி தமிழகத்தில் மேலும்  2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம்  கோரிக்கை வைத்தார்.

மேலும் பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் . அப்போது ஊரடங்கு குறித்து பிரதமர் அறிவிக்கும் முடிவை ஏற்று தமிழகம் பின்பற்றும் என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

BREAKING: தமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் கோரிக்கை .!