உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது!

உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது.
நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார்.
இந்நிலையில், இந்த விழாவில் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், கொரோனா ஒழிப்பு பணியில் அரசுக்கு வழங்கிய ஆலோசனைகளை அங்கீகரிக்கும் வகையில், உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதலமைச்சர் சிறப்பு விருதினை வழங்கியுள்ளார்.