#Breaking:கலவரமான சின்னசேலம் பள்ளி;வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

கள்ளகுறிச்சி மாவட்டம்  சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி  படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து

கள்ளகுறிச்சி மாவட்டம்  சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி  படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர்கள் கடந்த 5 நாட்களாக அமைதியான முறையில் போராட்டமா நடத்தி வந்தனர்,இந்நிலையில் பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் காவல்துறையினர் மீது கல்வீச்சு சம்பவமும் ஏற்பட்டது.இதில் டிஐஜி பாண்டியன் உட்பட  பல காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையின் வாகனங்களுக்கு தீவைப்பு மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர் .

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர கூடுதலான காவல்துறையினர் வரவைக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.