முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் வரலாம் என கூறப்பட்டிருந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் வெளியில் வந்து, தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும், 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், பணிக்கு செல்வதற்கு முன் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்துள்ளனர். அவர்களுக்கு நகராட்சி ஆணையர் சங்கரன் பயிற்சி வழங்கியுள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க மூச்சு பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்ட பின், அவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி அவர்களை பணிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்குமுன், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025