சமூக வலைதள விலகலை தீவிரமாய் கடைபிடித்து வரும் தல அஜித்.!

மே 1ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான தல அஜித்தை பற்றிய சிறு தொகுப்பு.!
வரும் மே மாதம் 1 ஆம் தேதி தல அஜித் தனது 49வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இவரது பிறந்தநாளை கொண்டாட காத்திருந்த ரசிகர்களுக்கு கொரோனா ஊரடங்கு ஏமாற்றத்தை அளித்துவிட்டது.
ரசிகர்கள் என்ன செய்தாலும் அவர் திரையில் வருவதை தவிர்த்து வேறு வெளியிடங்களில் தலை காட்டப்போவதில்லை. தன்னுடைய வேலை நடிப்பது மட்டுமே, ரசிகர்கள் அவரவர் குடும்பத்தை பார்க்க வேண்டும். என்பதே அஜித்தின் விருப்பமாக உள்ளது.
அஜித் டிவிட்டர், பேஸ்புக் போன்ற எந்தவித இணையதள பக்கத்திலும் அவர் இல்லை. இருந்தும், அவரது ரசிகர்கள் விடுவதாயில்லை. அவ்வப்போது அவரது ரசிகர்கள் ஏதேனும் ஒன்றை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது அரசு சமூக இடைவெளியை கடைபிடிக்க சொல்கிறது. ஆனால் தல அஜித் பல வருடங்களாக ரசிகர்களின் சமூக இடைவெளியும், சமூக வலைதள இடைவெளியும் கடைபிடித்து வருகிறார்.
பொழுதுபோக்கிற்காக திரைப்படத்தை பாருங்கள். மீதமுள்ள நேரங்களை குடும்பத்திற்காக செலவிடுங்கள் வாழு வாழ விடு என்பதே அவரின் கருத்தியலாக இருக்கிறது. இதனையே அவரும் பின்பற்றுகிறார். படப்பிடிப்பு போக மற்ற நேரங்களில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, அவருக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025