வெற்றி தவறினால் அமைச்சர் பதவி பறிப்பு.? முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.!

Published by
மணிகண்டன்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது . தேர்தல் நிர்வாக வேலைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையங்கள் ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றன. அதே போல பிரதான தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரையில் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என தற்போதே தேர்தல் வேலைகளில் களமிறங்கி உள்ளன.

அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக அமையும்- ஜெயக்குமார் பேட்டி .

இன்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்களாகவும் கட்சி பொறுப்பில் இருக்கின்றனர்.

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பெரிய நாம் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்று குறிப்பிட்டார். இந்த தேர்தல் மிக் முக்கியமான தேர்தல் என்றும் கூறியுள்ளார்.

திமுக தலைமையில் இருந்து தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  உங்கள் தொகுதியில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக ஒருங்கிணைப்பு குழுவிடம் கூறுங்கள். அவர்கள் மூலம் உடனடியாக சரி செய்து விடுங்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு (அமைச்சர்கள்) முதல்வர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும், கட்சி தொண்டர்களையும், கூட்டணி கட்சியினரையும் ஒரு சேர அரவணைத்து சென்று வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என முதல்வர் கூறினார். மேலும் , ஒருவேளை வெற்றியை மாவட்ட செயலாளர்கள் தவறவிட்டுவிட்டால் அந்த தொகுதிக்கு பொறுப்பாக இருப்பவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை நடைபெற்ற போதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதே போன்று ,40  தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். தவறினால் மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடதகைது.

Recent Posts

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

6 minutes ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

1 hour ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

2 hours ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

3 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

4 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

5 hours ago