பல கோடி ரூபாய் செலவில் தமிழக்த்தில் பல்வேறு இடங்களில் புதிய கட்டடங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.!

பல கோடி ரூபாய் செலவில் தமிழக்த்தில் பல்வேறு இடங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் புதிய கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட்டு சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில், 8.94 கோடி செலவில் விருதுநகர் மற்றும் குடியாத்தத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகம், 3.51 கோடி ரூபாய் செலவில் தேனியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றையும்,
2.20 கோடி ரூபாய் செலவில் சேந்தமங்கலம் மற்றும் பள்ளியாடி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள், உட்பட கூடுதல் 7 புதிய வணிகவரி நிர்வாக கோட்டங்கள், 6 புதிய வணிகவரி நுண்ணறிவு கோட்டங்கள், 13 புதிய வணிகவரி கட்டிடங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.