பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சந்திப்பு.! ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை.!

இலங்கை அதிபர், இந்தியா வந்துள்ள நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை.

tn fisherman

இலங்கை அதிபர், இந்தியா வந்துள்ள நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை.

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்க நலன் தொடர்பாக இருவரும் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

டெல்லியில் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார் ரணில் விக்ரமசிங்க. தற்போது, இருநாட்டு நல்லுறவு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜூலை 9ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. ஓரிரு நாட்களில் விமானம் மூலம், 15 மீனவர்களும் தாயகம் திரும்புவார்கள் என கூறப்படுகிறது. இலங்கை தமிழர் விவகாரம், இந்திய மீனவர் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார், தற்போது இலங்கை அதிபர், பிரதமர் மோடியை சந்தித்து வரும் நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.