முதல்வர் பழனிசாமி, அக்.13 மற்றும் 14 ஆம் தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர், கடந்த மாதம் 23 ஆம் தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார்.
அந்தசமயம், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியதால், முதல்வரின் இந்த 3 மாவட்ட சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி தற்பொழுது அக்.13 மற்றும் 14 ஆம் தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
முதல்வர், வரும் 13 ஆம் தேதியில் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் காலை 8.30 மணிக்கு வருகிறார். அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் தூத்துக்குடியில் முடிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தொடங்கி வைக்கிறார். மேலும், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை, மேம்பாட்டு திட்டம் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…