கூட்டுறவு வங்கி நகைக்கடன் நிலுவை விவரங்களை அளிக்க உத்தரவு..!

Co-operative sector order has been issued to provide details of jewelery loan arrears in co-operative banks.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிலுவை விவரங்களை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டுத்தொடரில் தமிழக அரசின் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்தார்.

அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், ஜனவரி 31 வரை நிலுவையில் உள்ள கடன் விவரங்களை அளிக்க கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.