கூட்டணி குறித்த ஆலோசனை !!இன்று கூடுகிறது தேமுதிக !!

This news is gives the information about Coalition consultation!

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.

இன்று (மார்ச் – 5-ம் தேதி) தேமுதிக கட்சியின் கூட்டணி குறித்த ஆலோசனை கூட்டம் கூடுகிறது.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மார்ச் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் ஆலோசனை நடத்தினார்.

இதில் மக்களவை தேர்தலில் கூட்டணி எவ்வாறு அமைந்தாலும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

unknown node

தேமுதிக  முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 5-ம் தேதி) நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் 5-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.