கோவை கார் வெடிப்பு சம்பவம்.. 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையில் விசாரணை.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையில் விசாரணை.

கோவை கார் வெடிப்பு:

unknown node

கோவையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் அரங்கேறியது. இதில், காரை ஓட்டி வந்த அதேப் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான ரசாயனங்கள், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு வாசகங்கள் அடங்கிய தாள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை:

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

unknown node

சென்னை சிறையில் இருந்து 5 பேரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அழைத்துவரப்பட்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, பெரோஸ் இஸ்மாயில், உமர் பாருக், அசாருதீன், நவாஸ், பெரோஸ் கான் ஆகியோரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 பேரையும் என்ஐஏ நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கூட்டி சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.