#Breaking:இன்று 12 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

Colleges in Dindigul district will be closed today due to heavy rains.

கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கல்லூரிகளுக்கும்,நீலகிரியில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக,இன்று பள்ளிகளுக்கு மட்டும் முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,கனமழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக தற்போது வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் விபரம் இதோ:

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:

இன்று நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கடலூர், ராமநாதபுரம்,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை:

மேலும்,தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை,சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.