‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும் – ரஜினியை மறைமுகமாக சாடிய உதயநிதி

- எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.
- ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும் என்று மறைமுக ரஜினியை சாடியுள்ளார் உதயநிதி.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில்,எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. நாட்டு நலனை கருத்தில் கொண்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.இவரது பதிவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஓரு சேர கிளம்பியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் என்று ரஜினியை சீண்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025