தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மதிமுக குழு அமைப்பு..!

தொகுதிப் பங்கீடு பற்றிய திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டனர். நேற்று அதிமுக சார்பில் பாமக உடன் தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.இதைதொடர்ந்து, நாளை மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பற்றிய திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் மல்லை சத்யா, செந்திலதிபன், கு.சின்னப்பா, அந்திரிதாஸ் ஆகியோர் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025