பெங்களுருவில் முன்னாள் முதல்வரான பஜக்கவை சேர்ந்த எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் அணியினர் சந்திப்பு.
கர்நாடகாவில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த சமயத்தில் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மே 10-ஆம் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி எனவும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தீவிர பிரச்சாரம்:
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முன்னிட்டு ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த வாக்கு வங்கியில் 5% தமிழர்கள் உள்ளனர்.
ஓபிஎஸ் அணி சந்திப்பு:
தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் 2 அல்லது 3ல் போட்டியிட அதிமுக தலைமை விருப்பம் தெரிவித்தது. இந்த நிலையில், பெங்களுருவில் கர்நாடக முன்னாள் முதல்வர் பாஜவை சேர்ந்த எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சந்தித்து பேசி வருகிறார். எடியூரப்பாவை ஓபிஎஸ் அணியை சேர்ந்த்த புகழேந்தி, குமார், முனிரத்தினம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.
போட்டியிட முடிவு:
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகாத நிலையில் சந்திப்பு நடந்துள்ளது. ஓபிஎஸ் கொடுத்த கடிதம் ஒன்றையும் எடியூரப்பாவிடம் புகழேந்தி கொடுத்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இபிஎஸ் அணி விருப்பம் தெரிவித்த நிலையில், தற்போது ஓபிஎஸ் அணியும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.