செங்கல்பட்டில் தனியார் காப்பகத்தில் பாலியல் தொல்லை என புகார்...! காப்பக உரிமையாளர் உட்பட 2 பேர் கைது..!

In the case of sexual harassment in a private shelter, 2 people including the owner of the shelter Weeramani were arrested.

Featured image

தனியார் காப்பகத்தில் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், காப்பக உரிமையாளர் வீரமணி உட்பட 2 பேர் கைது.

செங்கல்பட்டு மாவட்டம் பனங்காட்டுப்பாக்கத்தில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் அன்பகம் காப்பக உரிமையாளர் வீரமணி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் காப்பகத்தில் இருந்த 37 பெண்கள் உட்பட 59 பேர் மீட்கப்பட்டனர். செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத், காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உள்ளிட்டோர் காப்பகத்திற்கு நேரில் சென்று விசாரணை  மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், காப்பகத்தில் இருந்த மன வளர்ச்சி குன்றிய பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில் உறுதியானது. மேலும், அரசு புறம்போக்கு நிலத்தில் காப்பகம் செயல்பட்டு வருவதால் சீல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.