#Breaking: "மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்"- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

Corporation Commissioner Prakash said that Mansoor Ali Khan had lodged a complaint with the DGP's office.

கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் நாள் ஒன்றுக்கு 2,500-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்க 100 இணைப்புகள் கொண்ட கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர்மன்சூர்அலிகான்மீது டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளதாக கூறினார். மேலும், தடுப்பூசி தொடர்பாக அவதூறு பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கொரோனா தடுப்பூசிக்கும், நடிகர் விவேக் மரணத்திற்கும் தொடர்பு இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.