தமிழ்நாடு காவல்துறையினருக்கு வாராந்திர ஓய்வு நாள், பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் விடுமுறை வழங்க காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு சுற்றறிக்கை.
இதுதொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்காகவும், தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வார நாட்களில் ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக காவல்துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்தி, மாவட்ட, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்மந்தப்பட்ட ஆளிநர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
இந்த அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழாகி டிஜிபி சைலேந்திரபாபுவின் இந்த அறிவிப்பு காவலர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…