சலுகை கோரும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மருத்துவ சான்று அடிப்டையில் சலுகை தரலாம் என அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சலுகைகோரும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் சலுகை தரலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கும் மாணவர்கள் சலுகை கோரினால் மாவட்ட கல்வி அலுவலர்கள் முடிவெடுக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, சலுகை கோரும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மருத்துவ சான்று அடிப்டையில் சலுகை தரலாம் எனவும் அரசு தேர்வுத்துறை குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர்களுக்கு அரசு தேர்வுகள் இணை இயக்குனர் ஆணையிட்டுள்ளார்.