சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து நாளை (5.4.2022) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது.அதன்படி,சொத்து வரி குறைந்தபட்சம் 25 % முதல் அதிகபட்சம் 150 % வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால்,இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பல பம்பர் பரிசுகள்:
அந்த வகையில்,இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என தெரிவித்திருந்தார்.
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்:
இந்நிலையில்,சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து நாளை (5.4.2022) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக,அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சொத்து வரி உயர்வை திரும்பப் பெறு:
“தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் வகையில்,சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தம் என்று கடந்த 11 மாத காலமாக திமுக அரசு மேற்கொண்டிருக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும்,அராஜக ஆட்சி முறையையும் எதிர்த்து,சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 5.4.2022 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்டத் தலைநகரங்களில் நடத்த இருக்கிறது.
சென்னையில் ஓபிஎஸ்;திருச்சியில் ஈபிஎஸ்:
மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு,கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில்,கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும்,தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள்,ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திலும்,
கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திலும் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவர்கள் சிறப்பிப்பார்கள்:
அதேபோல்,ஏனைய மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில்,சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும்,கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பிப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்”,என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…