தமிழ்நாடு – ஆந்திரா மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம்.
நெல்லூர் மாவட்ட கடற்கரையில் தமிழ்நாடு – ஆந்திரா மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆந்திர மீனவர்கள் படகு மீது மோதியது தொடர்பான பிரச்சனையில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது அம்மாநில மீனவர்கள் தாக்குதல் நடத்தியாக என புகார் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு – ஆந்திரா மீனவர்கள் இடையேயான மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இரு மாநில மீனவர்கள் இடையேயான மோதல் காரணமாக பதற்றம் நீடிப்பதால் கடலோர காவல்படை வரவழைக்கப்ட்டுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.