நடிகர் விவேக் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்...! – டிடிவி

I pray that he will continue his work which has delighted millions of people with his talent

தனது திறனால் லட்சோப லட்சம் பேரை மகிழ்வித்துவந்த அவரது பணி மீண்டும் தொடர்ந்திட பிரார்த்திக்கிறேன்.

காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவர்கள் குழு நடிகர் விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர், டிடிவி தினகரன், ‘உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன். தனது திறனால் லட்சோப லட்சம் பேரை மகிழ்வித்துவந்த அவரது பணி மீண்டும் தொடர்ந்திட பிரார்த்திக்கிறேன்’ என தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.