தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்.பி. கனிமொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் ,இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை அவரை எதிர்த்துபோட்டியிட்ட முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு பின் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்பு அவர் வாபஸ் பெற்ற நிலையில் ,கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலாக வழக்கை நடத்த அனுமதி கோரி வாக்காளர் முத்துராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு இடையில் ,திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்தார்.அந்த வழக்கின் விசாரணையில், ,அவரது வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில் இன்று தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்.பி. கனிமொழி மனு தாக்கல் செய்தார் .இந்த வழக்கில் முத்துராமலிங்கம்,தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் வழக்கினை மார்ச் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…