தொடரும் கனமழை : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா...?

Schools in 8 districts in Tamil Nadu have been closed due to heavy rains.

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு ஆர்வத்துடன் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது கனமழை தொடர்ந்து வருவதன் காரணமாக கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் சென்னையிலும் கன மழை தொடர்வதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.