கொரோனா' சிகிச்சைக்கு, 'ரோபோ' தயார் -இலவசமாக தரும் தனியார் நிறுவனம்

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்து. இதனால் அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற நேரங்களில் மக்கள்

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்து. இதனால் அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடை, உணவகங்கள் (பார்சல் மட்டும் ) ஆகியவை வழக்கம்போல இயங்கலாம் எனவும், மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில்  திருச்சியில் புரபெல்லர் டெக்னாலஜிஸ் (propeller technologies ) என்ற ரோபோட்டிக் நிறுவனம் இயங்கி வருகிறது . சமீபத்தில் இந்த நிறுவனம் ‘ஜாபி’ (zafi robot)என்ற  ரோபோக்களை தயாரித்து வருகிறது.இந்நிலையில் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, முகமது ஆஷிக் ரகுமான், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த முன்வந்தால், இலவசமாக வழங்க தயார் என்று தெரிவித்துள்ளார்.