தமிழக பட்ஜெட் 2023-24க்கான உரையில், சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டத்தினை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில், பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் பட்ஜெட் உரையில், சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். மேலும் 1,000 புதிய பேருந்துகள் வாங்க மற்றும் 500 பேருந்துகளை புதுப்பிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.