#Breaking: தமிழகத்தில் ஒரே நாளில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

Corona infection has been confirmed in 1,087 people in a single day today as the spread of corona is currently on the rise in Tamil Nadu.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 1,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியதை தொடர்ந்து, தளர்வுகள் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்பொழுது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இன்று மேலும் 1,087 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,64,450 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 72,998 பேருக்கு கொரோனா மேற்கொள்ளப்பட்டது. இதனால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,83,11,295 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 421 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், 569 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,45,178 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 9 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,582 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் 6,690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.