தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே 9 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்த இருவர் லண்டனிலிருந்து சென்னை திரும்பியுள்ளனர்.

unknown node

இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் மற்றும் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் என தெரிவித்துள்ளார். மேலும் மதுரையை சேர்ந்த 54 வயதுடைய 3வது நபர், இவர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் எங்கும் செல்லவில்லை, தொடர்பும் இல்லை. ஆனால் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.