#Breaking: தமிழகத்தில் ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா.. 9 பேர் உயிரிழப்பு!

Today is the second day in Tamil Nadu that the number of corona victims has crossed 1000 and 1,243 persons tested positive for corona.

தமிழகத்தில் இன்று இரண்டாவது நாளாக கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 1000-ஐ கடந்தது. அந்தவகையில் இன்று 1,243 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியதை தொடர்ந்து, தளர்வுகள் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்பொழுது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இன்று மேலும் 1,243 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,65,693 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 75,165 பேருக்கு கொரோனா மேற்கொள்ளப்பட்டது. இதனால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,87,05,851 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 458 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், 634 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,45,812 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 9 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,590 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் 7,291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.