தமிழகத்தில் இன்று 695 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 8,58,967 ஆக அதிகரிப்பு.!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 695 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8,58,967 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 271 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,38,559 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,543 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 512 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 8,41,762 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தற்போது 4,662 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.