#Breaking: அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் ஒரே நாளில் 945 பேருக்கு தொற்று உறுதி!

A further 945 people in Tamil Nadu have been diagnosed with corona infection, bringing the total number of cases to 8,62,374.

தமிழகத்தில் மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,62,374 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், நீண்ட நாட்களுக்கு பின் இன்று கொரோனா பாடித்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கவுள்ளது. இன்று ஒரே நாளில் 71,888 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில், 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 8,62,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 395 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், 576 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,43,999 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 8 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,564 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் 2,277 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.