தமிழகத்தில் மேலும் 640 பேருக்கு கொரோனா – மருத்துவத்துறை அறிவிப்பு!

With the corona stabilizing for another 640 people in Tamil Nadu, the total number has risen to 27,37,335.

தமிழகத்தில் மேலும் 640 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 27,37,335 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 649-ல் இருந்து 640ஆக குறைந்துள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. 1,02,775 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 640ஆக உள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,37,335 ஆக உள்ளது.

சென்னையில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 126 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் இறந்தோர் எண்ணிக்கை 36,644 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 9 பேரும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 7,548 ஆக உள்ளது.  கொரோனாவில் இருந்து மேலும் 692 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 26.93,143 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.