தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி.!

தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பொன்ராஜ் (அண்ணா நகர்), சந்தோஷ் பாபு (வேளச்சேரி) ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தேமுதிக துணை செயலாளர் எல்கே சுதிஷ்க்கு கொரோனா பாதித்த நிலையில், அவரது கட்சியின் வேட்பாளருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025