தமிழகத்தில் கொரோனா தொற்று..! 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், சமீப நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் 69 பேர் கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த 3 பேரும் திண்டுக்கல், கன்னியாகுமாரி மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேழும், ஆக்சிஜன் படுக்கையில் 16 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 6 பேர் நாகப்பட்டினம் மாவட்டத்திலும், 4 பேர் சென்னையிலும், 4 பேர் சேலத்திலும், தூத்துக்குடியில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளான, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற வழிமுறைகளை கைக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.