மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று

Corona infection to master film director Lokesh Kanagaraj

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்தபடியாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தை இயக்குகிறார்.இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

கமல் தமிழக சட்டமன்ற தேர்தல் வேலையில் இருப்பதால்,இந்த படத்திற்கான முதற்கட்டப் பணிகளை லோகேஷ் கனகராஜ் கவனித்து வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார்.

“எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அங்கு என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.விரைவில் இன்னும் பலத்துடன் வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.