தஞ்சாவூரில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை அடுத்து தொற்று குறைந்திருக்கும் மாவட்டங்களில் தளர்வுகளை அறிவித்தது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தொற்று அதிகமாக பாதித்த மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூரில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
கொரோனாவின் அலை வேகமாக பாதித்த நாட்களில் தஞ்சாவூரில் நாளொன்றுக்கு 1000 தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தினசரி பாதிப்பு குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் 174 தொற்று பாதிப்புகள் தஞ்சையில் ஏற்பட்டது. ஆனால், நேற்று 210 தொற்றுக்கள் தஞ்சாவூரில் பதிவாகியுள்ளது.
தற்போதுவரை தஞ்சை மாவட்டத்தில் 1,739 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் இதுவரை 812 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இங்கு 4,000 பேருக்கு தினசரி சோதனை செய்யப்படுகிறது. இதில் 200 பேருக்கும் குறைவாக தொற்று பாதிப்பு வருகிறது.
இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிக கூட்டம் கூடும் இடங்களில் மக்கள் கூடுவதால் தான் பாதிப்பு அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். மேலும், கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள ஆயுதமாக இருக்க கூடிய கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…