தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரமாக உயர்த்த திட்டம்.
கோவையில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஏப்ரல் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் கொரோனா தடுப்பு சிகிச்சை ஒத்திகை நடைபெற உள்ளது என அறிவித்தார். தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தினமும் 4,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடைபெறுகிறது, அதை தினமும் 11,000 பரிசோதனை என்ற அளவில் உயர்த்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள், மருந்து கையிருப்புகள் போதுமான அளவில் உள்ளன. தனி நபர்கள்தான் கொரோனா பாதப்புக்கு ஆளாகி வருகின்றனர்.குழுவாக யாருக்கும் பாதிப்பு இல்லை.
முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைத் தவிர மற்ற எந்த மாநிலத்திலும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.